கவியரசுமுடியரசன் | தமிழ் ஆசிரியர்கள்

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

கவியரசுமுடியரசன் | தமிழ் ஆசிரியர்கள்


கவியரசுமுடியரசன்


கவியரசுமுடியரசன் 


இயற்பெயர்: துரைராசு
பிறப்பு: அக்டோபர் 7, 1920  
மறைவு: டிசம்பர் 3, 1998 
ஊர்: பெரியகுளம்
பெற்றோர்: சுப்பராயலு-சீதாலக்ஷ்மி 
சமூகப் பங்களிப்பு: கவிஞர்

சிறப்புப்பெயர்கள்:திராவிடநாட்டின் வானம்பாடி,கவியரசு


வாழ்க்கைக் குறிப்பு:
தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக்கவிஞர்களுள் ஒருவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக்கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்குஎண்ணங்களைஏற்றுப்பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுத்தவர். இவரது மறைவின்பொழுதும்எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடிமீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப்பணிபுரிந்தவர்.

எழுதிய சில நூல்கள்:

    பூங்கொடி

காவியப்பாவை
வீரகாவியம் என்னும் காப்பியங்கள்.
    முடியரசன் கவிதைகள் என்ற கவிதை நூல்


இவரது விதைகளைச்சாகித்தியஅகாடெமிஇந்தியிலும்ஆங்கிலத்திலும்மொழிபெயர்த்துவெளியிட்டுள்ளது.


    பூங்கொடி என்ற காவியம் 1966-இல் தமிழக அரசின் பரிசைப்பெற்றுள்ளது.

   
பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடிஅடிகளாரால்கவியரசுஎன்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.அறிஞர் அண்ணா 'திராவிடநாட்டின் வானம்பாடி' என்ற பட்டத்தை1957 இல்வழங்கினார்.