திருஞானசம்பந்தர்
G:\பொதுத் தமிழ்\பகுதி-இ (தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்)
திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்
வாழ்க்கை குறிப்பு:
- இயற்பெயர்
= ஆளுடையபிள்ளை
- பெற்றோர் = சிவபாதஇருதயார், பகவதி
அம்மையார்
- ஊர்
= சீர்காழி(தோணிபுரம்,
பிரம்மபுரம்,
வேணுபுரம்)
- மனைவி
= சொக்கியார்
- வாழ்ந்த
காலம் = 16
ஆண்டுகள்
- மார்க்கம்
= கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
- நெறி
= மகன்மை நெறி
- ஆட்கொள்ளட்பாட
இடம்
= சீர்காழி
- இறைவனடி
சேர்ந்த இடம்
= பெருமணநல்லூர்
- இவரின்
தமிழ் = கொஞ்சு தமிழ்
படைப்புகள்:
- 1,2,3 ஆம் திருமுறைகள்
- முதல்
மூன்று திருமுறைகள் =”திருகடைகாப்பு” எனப்போற்றுவர்
வேறு பெயர்கள்:
- ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
- திருஞானம்
பெற்ற பிள்ளை
- காழிநாடுடைய
பிள்ளை
- ஆணைநமதென்ற
பெருமான்
- பரசமயகோளரி
- நாளும்
இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
- திராவிட
சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்யலகரி என்னும் நூலில்)
- இன்தமிழ்
ஏசுநாதர்
- சத்புத்திரன்
- காழி
வள்ளல்
- முருகனின்
அவதாரம்
- கவுணியர்
- சந்தத்தின்
தந்தை
- காழியர்கோன்
- ஞானத்தின்திருவுரு
- நான்
மறையின்தனித்துணை
- கல்லாமல்
கற்றவன்(சுந்தரர்)
நிகழ்த்தியஅற்புதங்கள்:
- திருமறைக்காடு
= மூடிய கோயில் கதவுகளைபாடித் திறக்க செய்தார்.
- திருப்பாச்சிலாச்சிரமம்
= மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்
- திருமருகல்
= பாம்பு தீண்டியவணிகனின்விடம்நீக்கினார்
- திருவோத்தூர்
= ஆண்பனையைபெண்பனைஆக்கினார்
- மதுரை
= தான் தங்கியிருந்தமடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே
வெப்பு நோயாகப்பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, நீறு
பூசி அவனின் வெப்பு நோய் நீக்கி, அவனின்
கூன் நீக்கச் செய்து அவனை “நின்றசீர்நெடுமாறன்” ஆகினார்.
- மதுரை
= வாதத்துக்குஅழைத்தபுத்தநந்தியின் தலை துண்டாகுமாறு செய்தார்.
- மயிலாப்பூர்
= குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிருடன் வரச்
செய்தார்.
- திருஏடகம்
= வைகையாற்றில்இட்ட ஏடு கரை ஏறியது.
- திருப்பூந்துருத்தி
= நாவுக்கரசர் இவரை சுமந்த இடம்.
இறைவனிடமிருந்துபெற்றவை:
- திருகோலக்காவில்
= பொற்றாளம்
- திருவாடுதுறை
= பொற்கிழி
- திருவீழிமிழலை
= படிகாசு
- திருவாயிலறத்துறை = முத்துச்சிவிகை
- பட்டீஸ்வரம்
= முத்துப்பந்தல்
குறிப்பு:
- மூன்று
வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு “ஞானப்பால்” ஊட்டினார்.
அன்று முதல் இவர் “ஞானசம்பந்தன்” எனப் பெயர் பெற்றார்.
- இவர்
தந்தையாரின் தோளில் அமர்ந்தவாறேசிவத்தலங்கள் சென்று பாடினார்.
- இவரின்
அனைத்துப் பதிகங்களிலும்எட்டாவது பாடல் “இராவணன்” பற்றியும், ஒன்பதாவது பாடல் “மாலும்அயனும்” காண இயலாத சிவபெருமானின்பெருமையும், பத்தாவது பாடல் “சமணபௌத்தசமயங்கள்” துன்பம் தரும் தீங்கினைஉடையன
என்றும் பாடும் பாங்கினைகொண்டுள்ளன.
- 16 ஆண்டுகள் மட்டுமே இவர் உயிருடன் வாழ்ந்தார்.
- அந்தணரானசம்பந்தர்
தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாணர் குளத்தை சேர்ந்த
திருநீலகண்டயாழ்பாணரை அழைத்து செல்வார்.
- இவர்
தன்னை தானே “தமிழ் ஞானசம்பந்தன்” என அழைத்துக்கொள்வார்
- மதுரையில்அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களைதோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமணமுனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
- இவரின்
தோழர் = சிறுத்தொண்டர்எனப்படும்பரஞ்சோதியார்
- ஞானசம்பந்தர்
16000
பதிகம் பாடியதாகநம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு
கிடைத்தது 384
பதிகங்கள் மட்டுமே.
- கிடைக்கும்
மொத்தப்பாடல்கள் = 4181
- 220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.
- சம்பந்தரும்நாவுக்கரசரும்
சந்தித்த இடம் = திருப்புகலூர்
சிறப்பு:
- தந்தை
இல்லாமல் சென்ற இடங்களில் சிறுவனான இவரை, திருநாவுக்கரசர்
தம் தோளில் சுமந்து சென்றுளார்.(இடம் = திருப்பூந்துருத்தி)
- திருநாவுக்கரசரை
“அப்பர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
- இவரின்
நெறி = மகன்மை நெறி
- இவரின்
மார்க்கம் = சத்புத்திர மார்க்கம்
- சேக்கிழார்
தமது பெரியபுராணத்தில், “வேதநெறி
தழைத்தோங்க,
மிகு சைவத்துறை விளங்க இவர் தோன்றினார்” எனப் பாராட்டினார்.
- தம்
பாடல்களில்23
பண் அமைத்துப்பாடியுள்ளார்.
- ஏறத்தாழ
110
சந்தங்களை தன் பாடல்களில்அமைத்துப்பாடியுள்ளார். எனவே இவரை, “சந்தத்தின் தந்தை” என்று கூறுவர்.
- யமகம், மடக்கு முதலிய சொல்லணிகட்கும், சித்திரகவிக்கும்முதன்
முதலில் தொடங்கி வைத்தவர்சம்பந்தரே ஆவார்.
- சேக்கிழார்
பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால்
“பிள்ளை பாதி புராணம் பாதி” எனப்போற்றப்படுகிறது.
- இவர்
“முருகனின்அவதாரமாகவே” கருதப்பட்டார்.
- யாழ
முறி இவருக்கு மட்டுமே உரியது.
மேற்கோள்:
- காதலாகிக்
கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமைநன்னெறிக்குஉய்ப்பது
வேத நான்கினும்மெய்ப்பொருளாவது
நாதனாமநமச்சிவாயமே - சிறையாரும்மடக்கிளியே
இங்கே வா தேனொடுபால்
- ஞாயிறு
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்குமிகவே