பசுவய்யா | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV
|
சிறுகதைகளும்புதினங்களும்கட்டுரைகளும்எழுதியுள்ள, தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள்ஒருவரானசுந்தர
ராமசாமி தம் கவிதைப்படைப்புகளுக்கெனவைத்துக்கொண்ட புனைபெயர் பசுவய்யா. 30-5-1931இல்நாகர்கோவிலில்பிறந்தவர்சுந்தர
ராமசாமி. இளம் வயதில் அவர் கற்ற மொழி மலையாளம். 16
வயதான போதுதான்தமிழைக்கற்றார். உடல்நலக் குறைவு காரணமாகப்பள்ளிப்
படிப்பை இடையிலே கைவிட நேர்ந்த சுந்தரராமசாமிக்கு அவரது தாயார் மூலமாக
மணிக்கொடிஎழுத்தாளர்களின்படைப்புகள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. முதன்முதலாகப்புதுமைப்பித்தனின்‘மகாமசானம்’ என்னும் கதையைப் படித்தபோது ஏற்பட்ட
இலக்கியஉணர்வே அவரை எழுதத்தூண்டியது. ஜீவா, பாலதண்டாயுதம்,
ப. மாணிக்கம், G. நாகராஜன், தி. க. சி. போன்ற
பொதுவுடைமையாளர்களின்நட்புக்காரணமாகச்சுந்தரராமசாமியும்அக்கோட்பாட்டில் ஆர்வம்
கொண்டிருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். அவருடைய முதல்கதை‘முதலும்முடிவும்’ என்பது அவர் வெளியிட்ட புதுமைப்பித்தன் நினைவு மலரில்1952இல்வெளிவந்தது. அவருடைய முதல் கவிதை சி. சு. செல்லப்பா வெளியிட்ட
‘எழுத்து’
இதழில்1959இல்வெளிவந்தது.
சாகித்தியஅகாதெமிவிருதும் மேலும் பல விருதுகளும் பெற்ற சுந்தர ராமசாமி 15-11-2005
அன்று காலமானார்.
|
‘நடுநிசி நாய்கள்’ (1975),
‘யாரோ ஒருவனுக்காக’ (1987), ‘107 கவிதைகள்
(முழுத்தொகுப்பு) (1996) ஆகியவை சுந்தரராமசாமியின்
(பசுவய்யா) கவிதைத்தொகுப்புகள். பல தொகுதிகளாகவெளிவந்த அவரது சிறுகதைகள்‘சுந்தர ராமசாமி கதைகள்’ (2006) என முழுத் தொகுப்பாகவெளிவந்தன. அவருடைய
புதினங்கள்‘புளிய
மரத்தின் கதை’ (1966)’, ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’
(1981), ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ (1999) ஆகியவை. ‘காற்றில் கலந்த பேரோசை (1987)’, ‘விரிவும்ஆழமும் தேடி’ (1998), ‘நினைவோடை’ (2003)
என்பன அவரது கட்டுரைத் தொகுப்புகள். மலையாள எழுத்தாளர் தகழியின்‘செம்மீன்’, ‘தோட்டியின்மகன்’ ஆகிய புதினங்களைத்தமிழில் மொழி பெயர்த்துள்ளார். பிறமொழிக் கவிதைகள்
சிலவற்றைத்தமிழில்பெயர்த்துத்‘தொலைவிலிருக்கும் கவிதைகள்’
எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
|
பசுவய்யாகவிதையின் இயல்புகள்
|
சிறுகதை, புதினம், கட்டுரைகள் மூலமாகத் தெரியவரும்
சுந்தரராமசாமிக்கும் கவிதைகள் மூலமாகத் தெரியவரும் பசுவய்யாவுக்கும் இடையே சில
நுட்ப வேறுபாடுகள் உண்டு. வாழ்விலும்எழுத்திலும் அவர் மத, கடவுள் நம்பிக்கை அற்றவரே.
ஆயினும் ஆன்மிகத்துக்குச் சிறப்பாக உரிய அகவுலகத் தேடல் அவர் கவிதைகளில்
காணப்படுகிறது. இது கடவுள் தொடர்பானதன்று; மனித
அகவுலகின்வியப்புகள், அறியப்படாத இருள், புதுமைகள்தொடர்பானது. இவற்றை அவர் கதைகளில் காண முடியாது.
பசுவய்யாகவிதைகளின்தனித்தன்மைகள் குறிப்பிட்ட சாய்வு இல்லாத தத்துவத் தேடல், அகம் - புறம் எனப் பிரித்துப் பார்க்காமல் இயங்கும்
போக்கு, தெளிவாக - வெளிப்படையாகப் பொருள் புரியும் நடப்பியலானகவிதைகளுடன்
ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டி அகவுலகமலர்ச்சிக்கு வழி தரும் கூடார்த்தக்கவிதைகளும்
கலந்து வருதல், இயல்பாகவேபரிவுணர்வும்கருணையும்மென்மையும்சூழ்ந்த தன்மை
ஆகியவைகளாகும். உள்ளொளி, பொறி,
கனல் என்று மனித உள்ளமைப்பினுள் இருப்பதாக அவர் கட்டுரைகளில்
சொல்லும் உண்மைகளை அவர் கவிதைகளில் நாம் உணர முடிகிறது. உங்கள் பாடப்பகுதியில்
தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு கவிதைகளும்பசுவய்யாவின்தனித்தன்மையை அடையாளம்
காட்டுவனவே. அவற்றை இனிக் காணலாம்.
|
கொஞ்சம் முகம் பார்த்துத்தலைசீவ ஒரு சந்திரன்
லோஷன் மணக்கும் பாத்ரூம் என் மனக்குதிரைகள் நின்று அசைபோட ஒரு லாயம் என் கையெழுத்துப் பிரதியில்கண்ணோட முகங்கொள்ளும்ஆனந்தச்சலனங்கள் நான் காண ஒரு பெண் சிந்திக்கையில் கோத ஒரு வெண்தாடி சாந்த சூரியன் லேசான குளிர் அடிமனத்தில்கவிதையின் நீரோடை |
புலவன் தன் தேவைகளை யாரிடமாவது சொல்லி வேண்டுவது
என்பது தமிழ்க்கவிதைமரபில் நீண்டகாலம் இருந்து வருவது. சங்கப் புலவன் ‘பரிசில் கடாநிலை’ என்ற துறை அமைப்பில் தன் தேவைகளை அரசனிடம் தெரிவித்தான்.
அடியார்கள்இறைவனிடம்‘அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்
புரிதல் வேண்டும்’ என்பது போலத் தம்
தேவைகளைத்தெரிவித்தனர். பராசக்தியிடம் பாரதி ‘காணி நிலம்
வேண்டும்’ எனத்தொடங்கித் தம் தேவைகளைக் கேட்டார். (பார்க்க,
பாடம், 2) அந்த வழியில் இங்கு பசுவய்யா தமது
தேவைகளைத் தெரிவிக்கிறார். மற்றவர்களைப் போலக் குறிப்பிட்ட யாரிடமும்
கேட்கவில்லை. பசுவய்யாவுக்குக் கடவுள் ஈடுபாடு, மதம்
சார்ந்த ஆன்மிகம் இல்லை. தேவைகளைத் தெரிவிக்கிறார், யாரிடமும்
வேண்டவில்லை; அவ்வளவே.
|