வண்ணதாசன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

வண்ணதாசன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV



வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும்கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர்சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடுதிருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன்ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன்,தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.[1]
ஆக்கங்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
1.    கலைக்க முடியாத ஒப்பனைகள்
2.    தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
3.    சமவெளி
4.    பெயர் தெரியாமல் ஒரு பறவை
5.    மனுஷா மனுஷா
6.    கனிவு
7.    நடுகை
8.    உயரப் பறத்தல்
9.    கிருஷ்ணன் வைத்த வீடு
10. ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
11. சில இறகுகள் சில பறவைகள்
புதினங்கள்
1.    சின்னு முதல் சின்னு வரை
கவிதைத் தொகுப்புகள்
1.    புலரி
2.    முன்பின்
3.    ஆதி
4.    அந்நியமற்ற நதி
5.    மணல் உள்ள ஆறு
கட்டுரைகள்
1.    அகமும் புறமும்