பாரதிதாசன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

பாரதிதாசன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV



* இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
* சிறப்பு பெயர் - புரட்சிக்கவிஞர், பாவேந்தர்.
* காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
* பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
* திருமணம்: 1920ல்பழநிஅம்மையாரைமணந்தார்.
* படைப்புகள்: எதிப்பாராத முத்தம், சேர தாண்டவம், குறிஞ்சித் திட்டு, கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, காதல் நினைவுகள், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கழைக்கூத்தியின் காதல், தமிழச்சியின் கத்தி, அமைதி, இளைஞர் இலக்கியம், செளமியன், நல்ல தீர்ப்பு, தமிழ் இயக்கம், இரண்யன் அல்லது இணையற்ற வீரன், காதலாகடமையா? சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.
* சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நூல் பொதுவுடைமையைவலியுறுத்துகிறது.
* கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
* கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
* இயற்கையைவர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
* பாரதிதாசன்நடத்திய இதழ் - குயில்.
* பாரதியார் மீது கொண்டகாதலால்சுப்புரத்தினம் என்ற இயற்பெயரைபாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
* கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் - பாரதிதாசன்.
* நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் - பாரதிதாசன்.
* புதியதோர் உலகம் செய்வோம் - பாரதிதாசன்.
* தமிழுக்குத்தொண்டுசெய்வோன்சாவதில்லை - பாரதிதாசன்.
* கொலைவாளினைஎடடா - மிகு கொடியோர் செயல் அறவே - பாரதிதாசன்.
* எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - பாரதிதாசன்.
* தமிழுக்குஅமுதென்று பேர் - இந்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - பாரதிதாசன்.
* கோரிக்கையற்றுக்கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா - பாரதிதாசன்.
காரைக்கால் அம்மையார்
* காரைக்கால் அம்மையார் இயற்பெயர் - புனிதவதி. பிறந்த ஊர் - காரைக்கால். இவரது பாடல் மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது.
* திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனைவழிபட்டவர் காரைக்கால் அம்மையார்.
* அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கியவகையைத்தொடங்கிவைத்தவர். இறைவனால்அம்மையே என்று அழைக்கப்பட்டவர்.
* இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில் தம் கால் பதிக்க அஞ்சி ஞானசம்பந்தர் ஊர்ப்புறத்தே தங்கினார்.
எண் குறிப்புகள்
* பூதங்கள் ஐந்து, நிலம் நீர், தீ, காற்று ஆகாயம் ஆகியன.
* ஞானந்திரியங்கள் ஐந்து. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.
* கார்மேந்திரயங்கள் ஐந்து. வாக்கு(வாய்), பாணி (கை), பாதம் (கால்), பாயு (மலவாய்), உபஸ்தம் (கருவாய்) ஆகியன.
* தன் மாத்திரைகள் ஐந்து. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியன.
* அந்தக் கரணங்கள் (அக கருவிகள்) நான்கு. மனம், புத்தி (அறிவு), சித்தம் (நினைவு) அகங்காரம் (முனைப்பு) ஆகியன.
* மலங்கள் மூன்று. ஆணவம், கன்மம், மாயை ஆகியன.
* உடல்கள் மூன்று. பருவுடல், நுண்ணுடல், காரண உடல் ஆகியன.
* கர்மங்கள் மூன்று. இருப்பு வினை (சஞ்சிதகர்மம்), நுகர்வினை (பிராத்த கர்மம்), நிகழ்வினை (ஆகாமிய கர்மம்) ஆகியன.
* குணங்கள் மூன்று. ராஜஸம் (மன எழுச்சி), தாமஸம் (மயக்கம்), சாத்வீகம் (அமைதி) ஆகியன.
குமரகுரூபரர்
* பிறந்த ஊர் ஸ்ரீவைகுண்டம். ஐந்து வயது வரை ஊமையாக இருந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறன் பெற்றவர் குமரகுரூபரர்.
* மீனாட்சியம்மைபிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம் ஆகிய நூல்களை மதுரையிலும், ஸ்ரீவைகுண்டத்தில்கைலைக்கலம்பகத்தையும், சிதம்பரத்தில் சிதம்பர மும்மணிக்கோவையையும் இயற்றியவர்.
* காசியில்இவ்ர்நிறுவிய மடம் குமாரசாமி மடம். பிரபந்தவேந்தர் என்று அழைக்கப்படுகிறார்.
அருணகிரியார்
* ஊர் திருவண்ணாமலை முத்தைத்தரு என்று முருகன் அடியெடுத்துக்கொடுக்கப்பாடியவர்அருணகிரியார்.
* சந்தக் களஞ்சியம் எனப்படும்திருப்புகழை இயற்றியவர். சந்தவேந்தர் என்று அருணகிரியார்புகழப்படுகிறார். கனதர் அலங்காரம், கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில்
விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
* முருக நாயனார் என்று புகழப்படுபவர். முவரை கந்தர் அனுபூதி சொன்னஎன்தை - என்று போற்றியவர் தாயுமானவர் ஆவார்.
ஒட்டக்கூத்தர்
* இயற்பெயர் கூத்தர். விக்கிரசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப்புலவராக இருந்தவர்
ஒட்டக்கூத்தர்.
* மூவர் உலா, குலோத்துங்கன்பிள்லைத் தமிழ் (தமிழின் முதல் பிள்ளைத் தமிழ் நூல்), தக்கயாகப் பரணி (வீரபத்திர பரணி), தில்லை உலா போன்ற நூல்களை ஒட்டக்கூத்தர் இயற்றியுள்ளார்.
* கூத்தனூரில்கலைமகளுக்குகோயில்கட்டியவர் இவர். கவிராட்சதன், காளக்கவி, சர்வஞ்ஞகவிபோன்றபட்டங்களை உடையவர்.
* கம்பர் கூழுக்குப்பாடியவர், கூத்தர் மன்னனுக்குப்பாடியவர்என்பவர்.
பாம்பன்சுவாமிகள்
* இயற்பெயர் குமரகுருதாசர். இராயப்பேட்டை (சென்னை) பாலசுப்ரமணியபக்தஜனசபையைத்தொடங்கியவர்.
* அருணகிரியாருக்குகுருபூஜைஎடுக்கச் செய்தவர். இக்காலஅருணகிரி என்று போற்றப்பட்டவர்.
ஆழ்வார்கள்
* பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம். சங்கின்அம்சமாகப் பிறந்த பொய்கையாழ்வார்முதன்முதலாகதிருமாலின் பத்து அவதாரங்களைப்பாடியவர் ஆவார்.
* காலம் - 7ம்நூற்றாண்டு
* மகாபலிபுரத்தில் பிறந்த பூதத்தாழ்வார்பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொண்டார். கதாயுதத்தின்அம்சமாகப்பிறந்தவர்.
* மயிலாப்பூரில்வாளின்அம்சமாகப் பிறந்த பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியைப்பாடியவர்.
* பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவருமேமுதலாழ்வார்கள்எனப்படுவர்.
* சக்கரத்தின் அம்சமாக திருமழிசையில்பிறந்தவர்திருமழிசையாழ்வார்.
* ஸ்ரீவில்லிபுத்தூரைச் சார்ந்த பெரியாழ்வார் கருடஅம்சமாகப்பிறந்தவர். பட்டர் பிரான் என்றும் குறிப்பிடப்படுபவர். இவரது வளர்ப்பு மகள் ஆணடாள். ஆண்டாளுக்குக்
கோதை என்று பெயரிட்டார். பிள்ளைத் தமிழ் என்ற சிற்றிலக்கியவகையின்முன்னோடி பெரியாழ்வார்.
* பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளானஆண்டாளாழ்வார் துளசி வனத்தில்கண்டெடுக்கப்பட்ட பெண் ஆவார். சூடிக்கொடுத்ததால்சூடிக்கொடுத்தசுடர்க்கொடிஎனப்பட்டார்.
* இறைவனுக்கு மனைவியானதால்நாச்சியார்எனப்பட்டார். திருப்பாவை, திருமொழிஆகியவற்றைப்பாடியவர். திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர்இராமானுஜர் ஆவார்.