நாமக்கல் கவிஞர் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

நாமக்கல் கவிஞர் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV




இயற்பெயர்: இராமலிங்கம் பிள்ளை

பிறப்பு: அக்டோபர் 19 1888

ஊர்: மோகனூர் -நாமக்கல் மாவட்டம்

பெற்றோர்: அம்மணிம்மாள், வெங்கடராமன்

மறைவு: ஆகஸ்ட் 24, 1972

வாழ்க்கைக் குறிப்பு:


தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். கத்தியின்றிஇரத்தமின்றியுத்தமொன்றுவருகுதுபோன்ற தேசபக்தி பாடல்களைப்பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும்போற்றியவர். முதலில் பாலகங்காதரதிலகர்போன்றவர்களின்தீவிரவாதத்தால்ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின்கொள்கைகளால்ஆட்கொள்ளப்பட்டபின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப்பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

 
தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களைதேசத்தொண்டர்களாகமாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச்சத்தியாக்கிரகப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டுசிறைத்தண்டனை பெற்றவர். அரசவைக் கவிஞர்பதவியும், `பத்மபூஷண்பட்டமும் பெற்றவர். சாஹித்யஅகாடமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

தமிழனென்றுசொல்லடா தலைநிமிர்ந்து நில்லடாஎன்கிற வீரநடைக்குவித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாகஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக்கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரின் மலைக்கள்ளன் நாவல் எம்ஜிஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச்சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.

    ’
கத்தி யின்றி ரத்த மின்றி
   
யுத்த மொன்றுவருகுது
   
சத்தியத்தின்நித்தியத்தை
   
நம்பும் யாரும் சேருவீர்

என்னும் பாடலை உப்புச்சத்தியாகிரகத்தொண்டர்களின்வழிநடைப்பாடலாகப்பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

புகழ் பெற்ற மேற்கோள்கள்:

    '
கத்தியின்றிரத்தமின்றியுத்தமொன்றுவருகுது'
   
தமிழன் என்றோர்இனமுன்று

   
தனியே அதற்கோர்குணமுண்டு'

    '
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
    '
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

   
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

படைப்புகளில் சில:

   
மலைக்கள்ளன் (நாவல்)
   
காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
   
பிரார்த்தனை (கவிதை)
   
நாமக்கல் கவிஞர் பாடல்கள்
   
திருக்குறளும்பரிமேலழகரும்
   
திருவள்ளுவர் திடுக்கிடுவார்
   
திருக்குறள் புது உரை
   
கம்பனும்வால்மீகியும்
   
கம்பன் கவிதை இன்பக் குவியல்
   
என்கதை (சுயசரிதம்)
   
அவனும் அவளும் (கவிதை)
   
சங்கொலி (கவிதை)
   
மாமன் மகள் (நாடகம்)
   
அரவணை சுந்தரம் (நாடகம்)

கவிஞரின்நாட்டுப்பற்றைப்போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக்கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும்நியமித்துச்சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன்விருதளித்துப்போற்றியது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.