தேவதேவன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

தேவதேவன் | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV





பெயர்:  பிச்சுமணிகைவல்யம்
புனைபெயர்: தேவதேவன்
பிறந்த இடம்: இராஜாகோயில், காமராஜர் மாவட்டம்(05.05.1948)
 
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை
படைப்புக்கள்:
சிறுகதைத்தொகுப்புகள்:
  • தேவதேவன் கதைகள்
கவிதைத்தொகுப்புகள்:
  • தேவதேவன் கவிதைகள்
  • மார்கழி
  • குளித்துக்கரையேறாதகோபியர்கள் (1976)
  • மின்னற்பொழுதே தூரம் (1981)
  • மாற்றப்படாத வீடு (1984)
  • பூமியைஉதறியெழுந்த மேகங்கள் (1990)
  • நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)
  • சின்னஞ்சிறிய சோகம் (1992)
  • நட்சத்திர மீன் (1994)
  • அந்தரத்திலே ஓர் இருக்கை (1995)
  • நார்சிஸஸ் வனம் (1996)
  • புல்வெளியில் ஒரு கல் (1998)
  • விண்ணளவு பூமி (2000)
  • விரும்பியதெல்லாம் (2002)
  • விடிந்தும்விடியாப் பொழுது (2003)
விருதுகள்:
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
  • லில்லிதேவசிகாமணி விருது
  • தேவமகள் அறக்கட்டளை விருது
  • தமிழக அரசின் விருது
  • விளக்கு விருது
  • வழங்கும் 'சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது' - தூத்துக்குடி பியர்ல்பவுண்டேஷன் - 2011
இவர் பற்றி:
  • ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். இளம்வயதில்மரபுக்கவிதைகள்எழுதிவந்தகைவல்யம்தோரோ, எமர்சன்ஆகியோரின்படைப்புகளால் கவரப்பட்டு நவீனக்கவிதைகளைபுணையதொடங்கினார். குறுகிய காலம் கேரளத்தில்வாழ்ந்தபோது அங்கிருந்த இயற்கைக்காட்சிகளினால்ஆழ்மானமனநகர்வுக்குஉள்ளாகி நிறைய கவிதைகள் எழுதினார். தேவ தேவன் வெறுமனே 'புல், மரம், வீடு என பராக்குப் பார்க்கும் மனிதர் அல்ல. இயற்கையின் விசித்திரங்களுள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச்செறிவைக்கவிதையாக்குவது அவரது வழமையாகும். கவிஞனுக்கும்தத்துவத்திற்கும்எவ்விதமான தொடர்புமில்லை என முழங்குதலேதத்துவமாகிப் போன சூழலில் கவிதை அப்பழுக்கற்றது. தூய பளிங்கு போன்றது. கள்ளங்கபடமற்றஅப்பாவித்தனமானது. குழந்தைமையானது. கருத்தியலையோதத்துவத்தையோசுமப்பதற்குலாயக்கற்றது என்ற கருத்து தேவதேவனுக்கு உண்டு. சுருங்கக்கூறின்பிரக்ஞையில்ததும்பி வழியும் சொற்கள், மின்னற்பொழுதில்பதிவாகும்காட்சியின் உக்கிரம் கவிஞருக்குக்கவிதையாகிறது. தேவதேவனைப் பற்றி ஜெயமோகன் முழுமையான திறனாய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். கைவல்யத்தின் கவிதைகள் எளிய சிக்கலில்லாதமொழிநடையைக்கொண்டவை. இயற்கைசார்ந்தபடிமங்களைஉள்ளொடுங்கியதத்துவநோக்குடன்சொல்பவை. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும். நவீன வாழ்க்கையின் அழகின்மையையும்இலக்கின்மையையும்விமர்சிக்கும் தேவதேவன் இயற்கையின் பேரழகையும் அதன் சாரமானகருணையையும் மீண்டும் மீண்டும்முன்வைக்கிறார். கவிதைக்குபுற அரசியல் தேவையில்லை, கவிதை தன்னளவிலேயேஅரசியல்செயல்பாடுதான் என்று வாதிடும் தேவதேவன் தமிழக தலித்துக்கள் மீது தொடுக்கப்படும்அடக்குமுறைகளுக்கு எதிராக மிகுந்த உணர்ச்சிப்பங்குடன்கண்டனக்கவிதைகளைஎழுதியுள்ளார்.